Map Graph

திருவனந்தபுரம் வானியல் ஆய்வகம்

கேரளத்தில் உள்ள வான் ஆய்வகம்

திருவனந்தபுரம் வான் ஆய்வகம் அல்லது திருவனந்தபுரம் வானியல் ஆய்வகம் என்பது ஒரு அறிவியல் மற்றும் நோக்காய்வகமாகும், இது திருவாங்கூர் மன்னர் சுவாதித் திருநாள் ராம வர்மாவால் 1836-37 இல் நிறுவப்பட்டது. அரசர் பிரித்தானிய வதிவாளர் கர்னல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் ஃப்ரேசருக்கு ஒரு தொழில்முறைஞர் அல்லாத ஒரு வானியல் ஆய்வகத்தை நிறுவ முன்மொழிந்தார். இதற்கு முன்பு ஆலப்புழாவில் தனிபட்டமுறையில் ஒரு சிறிய ஆய்வகத்தை நடத்திவந்த ஜான் கால்டெகாட் அரச வானியலாளராக நியமிக்கப்பட்டார். இந்த ஆய்வகம் நகரத்தின் மிக உயரமான இடத்திலும் அரண்மனைக்கு எதிரேயும் அமைந்திருந்தது, அந்த நேரத்தில் காந்த மையக்கோடு திருவனந்தபுரம் வழியாக சென்றதால் இது முக்கியமானதாக கருதப்பட்டது. இந்த ஆய்வகத்தை மதராஸ் பொறியாளர்களின் லெப்டினன்ட் டபிள்யூ.எச். ஹார்ஸ்லி வடிவமைத்தார்.

Read article
படிமம்:Trevandrum_observatory.jpg